குட் நியூஸ்... 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை!

 
மொபைல்


 ஆறுமாத குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை கையில் எந்நேரமும் மொபைல் போன்கள். இதனை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் பெற்றோர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். சில நாடுகள் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.  

மொபைல்

அதே நேரத்தில் அவர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்க பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டாா்கள் என ஆஸ்திரேலிய அரசு உறுதிளித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா   நாட்டு தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ”  சமூக ஊடகங்களை சிறுவா்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து  அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும். இருந்தாலும், அந்த திட்டத்தை அமல்படுத்த சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது” எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா

 இருந்தபோதிலும்  16 வயதுக்குட்பட்டவா்களைக் கண்டறிய நிறுவனங்கள்  கையாளும் முறைகள் குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை.  சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் 16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை உலகிலேயே முதல்முறையாக இயற்றியுள்ளோம் என  ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web