ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்...!!
கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. சபரிமலை வாசனை உள்ளம் உருகி வேண்டிக் கொண்டு விரதமிருந்து பலன்களைப் பெற்று வாழ்க்கையில் உயர்நிலையை அடையுங்கள். அது சரி.. ஏன் ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம் தெரியுமா? அதற்கு காரணமும், பொருளும் உண்டு. புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து, தன்னை காண வரும் பக்தர்களின் துயர் தீர்த்து அருள்பாலிப்பவர் ஐயப்பன்.
எப்போதுமே நீதி நெறி தவறாதவர் ஐயப்பன். தன் பக்தர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பொறுக்காதவர். சாஸ்தா என்றால் ஆட்சியாளர், கட்டளையிடுபவர், தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று பொருள். அதனால் தான் முருகனை பிரம்ம சாஸ்தா என்றழைக்கிறோம். எதனால் பிரம்ம சாஸ்தா என்றழைக்கிறோம்.. தகப்பனுக்கே உபதேசித்ததால் தகப்பன் சாமியான முருகன், பிரம்மனுக்கு கட்டளையிட்டவர். அதனால் முருகனை பிரம்ம சாஸ்தா என்றழைக்கிறோம். அப்படி தான் வீர பத்ரரை தக்ஷ சாஸ்தா என்கிறோம். ஏனெனில், அவர் தக்ஷ பிரஜாபதியை தண்டித்ட் ஹவர்.
ஐயப்பனை தர்ம சாஸ்தா என்றழைக்க காரணம், தர்ம வழியில் ஆட்சி செய்பவர் என்பதால் தான். அந்த தர்மத்தை நிலைநாட்டுபவராக இருப்பதால், ஐயப்பனை தர்மசாஸ்தா என்றழைக்கிறோம். தன் பக்தர்களின் துயரைத் தீர்க்கிறார்.தாமதமாக எல்லாம் கிடையாது. தனது பக்தர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகளுக்கு தகுந்த நேரத்திலேயே தர்ம நெறியில் நீதி வழங்குகிறார். கார்த்திகை மாதத்தில் விரதமிருந்து, ஐயப்பனை தரிசித்து தங்களது மனக்குமுறலைச் சொல்லி, விடிவு கிடைத்த திருப்தியுடன் திரும்புகிறார்கள் பக்தர்கள். ஒரு முறை நீங்களும் ஐயப்பனைத் தரிசித்து பாருங்க.. உங்க வாழ்க்கையிலும் ஒளியேற்றப்படும்.
விரதம் இருந்து மாலைப் போட்டு, ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் தினமும் பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஐயப்பனை தரிசிக்க செல்லுங்க.
கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்
வரம் வாமஹஸ்தம் சஜாநு}பரிஸ்தம்
வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்
பஜே சம்பு விஷன்வோஸ் ஸுதம் பு தனாதம்.
வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே!
தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை காட்டுபவனே!
மார்பில் மின்னும் யோக பட்டத்துடன் காட்சியருள்பவனே!
பூதங்களின் நாதனாக திகழ்பவனே!
ஹரிஹரபுத்திரனே!
ஐயப்ப சுவாமியே, உன்னை வழிபடுகிறேன்!
சுவாமியே சரணம் ஐயப்பா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!