அதிர்ச்சி! கதவை திறந்து வைத்து தூங்கியதால் விபரீதம்.. கத்தி முனையில் ஆசிரியருக்கு பாலியல் வன்கொடுமை!

 
பாலியல் வன்கொடுமை

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.இவரது கணவர் இரவில் ஆட்டோ ஓட்ட செல்வதால், இரவில் மகள்களுடன் வீட்டில் தனிமையில் இருப்பது வழக்கம்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வெப்பம் அதிகமாக இருந்தால் காற்றிற்காக கதவை சற்று திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குடிபோதையில் மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அருகில் இரண்டு மகள்கள் படுத்திருந்ததால், அந்த ஆண் மகள்களை ஏதாவது செய்துவிடுவாரோ என்று பயந்து சத்தம் போட முயன்றார்.

இதையடுத்து அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பிடித்து அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பெண் ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்தவர் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் (38) என்பதும், குடிபோதையில் வீட்டிற்குள் நுழைந்து பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார், வேறு எங்காவது இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web