சர்தார் 2 வில் இணைந்தார் S.J சூர்யா!

 
சர்தார் 2
 

கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.


 
தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூலை 15) இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ‘சர்தார் 2’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சர்தார்2

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்தார் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web