நாளை சிவகார்த்திகேயன் பட ட்ரைலர் வெளியீடு !!

 
நாளை சிவகார்த்திகேயன்  பட ட்ரைலர் வெளியீடு !!


தமிழ் திரையுலகில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவரது நடிப்பில் உருவான ‘டாக்டர்’ திரைப்படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

நாளை சிவகார்த்திகேயன்  பட ட்ரைலர் வெளியீடு !!


திரையரங்கில் அக்டோபர் 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது
‘கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார்.

மேலும் யோகிபாபு , வினய் என பல நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோசும், சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

நாளை சிவகார்த்திகேயன்  பட ட்ரைலர் வெளியீடு !!


இப்படத்தில் இடம் பெற்ற ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் மற்றும் so baby ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக இத்தனை நாட்கள் தள்ளி வைக்கப்பட்ட டாக்டர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் அக்டோபர் 9ல் வெளியாகும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web