சிவகார்த்திகேயனின் டாக்டர் பட விமர்சனம்!

 
சிவகார்த்திகேயனின் டாக்டர் பட விமர்சனம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு சில பல இழுபறிகளுக்கு பின் வெளியாகியிருக்கிறது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட விமர்சனம்!

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரியான நெல்சன் இயக்கி இருக்கும் டாக்டர் படத்தை, தங்களது ஹீரோவின் அடுத்த பட இயக்குனர் என்று விஜய் ரசிகர்களுமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். தியேட்டரில் விஜய் ரசிகர்களின் ஒத்துழைப்பு தெரிகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், இத்தனை நாட்களான காத்திருப்புக்கும் ஏமாற்றம் தராத வகையில் டாக்டர் படம் அமைந்திருக்கிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட விமர்சனம்!

நிறைய காட்சிகளில் அசால்டாக தனது நடிப்பு தேர்ச்சியடைந்துள்ளதைக் காட்டுகிறார் ஹீரோ சிவகார்த்திகேயன். காமெடி நடிகர் என்று ஓரங்கட்டி இன்னும் யாரும் சிவாவை தள்ளி வைக்காத அளவுக்கு நடிப்பில் தேர்ச்சியும், முதிர்ச்சியும் கூடியுள்ளது. ஆரவாரமில்லாத சமர்த்து பையனாக வலம் வரும் சிவகார்த்திகேயனைப் போலவே முதல் அரை மணி நேரமும் படம் மெதுவாகவே நகர்கிறது. படத்தில் சிவகார்த்திகேயன் வசனங்களிலும் நிறையவே அடக்கி வாசிக்கிறார். இப்படி ஹீரோ பில்டப்களை கட் செய்து நடித்தால், இன்னொரு பெரிய ரவுண்ட் வருவார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட விமர்சனம்!

அந்த அரை மணி நேர பொறுமையை ரசிகர்கள் கடைப்பிடித்தால், அதன் பின்னர் படம் முழுக்கவே டாப் கியர் தான். எப்போதும் சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாகவே வலம் வரும் சூரிக்குப்தில் இந்த படத்தில் யோகி பாபு. யோகிபாபுவின் ஒன்லைனின் கொரோனாவை எல்லாம் தெறிக்க விடுகிறது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு. சிவகார்த்திகேயன் ராசியில், நாயகி பிரியங்கா மோகனுக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும். நடிக்கவும் செய்திருக்கிறார்.

இளவரசு கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தம். தொடர்ந்து வெற்றி படிகளில் ஏறி வந்த சிவகார்த்திகேயனை சீமாராஜா சிந்திக்க வைத்திருக்கிறது. ‘டாக்டர்’ படத்தில் அவர் இயக்குநரின் ஹீரோ தான். தேவையற்ற பில்டப் காட்சிகள் மிஸ்ஸிங். கொரோனாவுக்கு பின்னரும் டாக்டர் நல்ல வசூலைப் பார்க்கலாம்.

From around the web