’இந்திய தூதரகத்தை மூடுங்கள்’.. கனடாவில் சீக்கிய அமைப்புகள் தொடர் போராட்டம்!

 
கனடா போராட்டம்

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் நீண்டகால நட்பு உண்டு. இந்த உறவு கடந்த ஆண்டு முதல் மோசமாகி வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதே இதற்குக் காரணம். இந்த விவகாரத்தின் பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக கனடா பிரதமர் திட்டவட்டமாக குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் முன் எப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கனடா இந்திய மாணவர்கள்

கனடா பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள கனடா தூதர் உட்பட 6 அதிகாரிகளை நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக கனடாவுக்கான இந்திய தூதர் உட்பட கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேறுமாறு கனேடிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான கனேடிய அரசின் நடவடிக்கைகளை அங்கு  உள்ள சீக்கிய அமைப்புகள் வரவேற்றுள்ளன.

மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கனடாவின் வான்கூவரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பாக,   சீக்கிய சமூகத்தினர் நேற்று பேரணியாக சென்று இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, ​​வான்கூவர் மற்றும் டொராண்டோவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட வேண்டும் என சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தின.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web