அதிர்ச்சி வீடியோ... பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேண்டீனில் புழு, பூச்சிகள் கலந்த உணவு!

 
சாப்பாட்டில் புழு

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் எல்லாம் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளவையாகவே இருந்து வருகின்றன. ஆனால், இடைத்தரகர்களாக ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று ஊழல் செய்யும் பெருச்சாளிகள் மக்களுக்கான திட்டங்களில் தங்கள் வயிற்றை வளர்த்து ஏழெழு தலைமுறைக்கும் சேர்த்து சொத்துக்களைக் குவித்து வருகின்றனர்.

உணவகங்களில் கலப்படம் என்பது தெள்ளத்தெளிவாக பல இடங்களில் நடைபெற்றாலும் உயிர்பலி வாங்கும் வரை பெரும்பாலான அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை. சாலையைப் பார்த்தது போல் இருக்கின்ற பெரும்பாலான பாஸ்ட்புட் உணவகங்களின் தரம் படுமோசம். கெட்டுப்போன இறைச்சி என்பது பார்த்தாலே தெரியும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளில் பலரும் நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்கள். 

இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள், பூச்சிகள் கலந்து உணவுகள் வழங்கப்படுவதாக மாணவர்கள் புகைப்படங்களுடன் குற்றம் சுமத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தனைக்கும் கல்வி நிலையங்களுக்கும், மாணவர்களின் நலனுக்கும் அக்கறைக் காட்டுகின்ற மத்திய மாநில அரசுகள் கோடிகளில் பணம் செலவழிக்கின்றன. தமிழகத்திலேயே ஒரேயொரு மத்திய பல்கலைக்கழகமாக முன்னாள் முதல்வர்  கலைஞரின் முயற்சியால் திருவாரூரில் அமைக்கப்பட்டது. திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் நாடு முழுவதுமிருந்தும் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 

மத்திய பல்கலைக்கழகம்

இந்நிலையில் இந்த பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் பூச்சிகள், புழுக்கள் கலந்து இருப்பதாக மாணவர்கள் கொந்தளிக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் தொடர்ந்து புழுக்களும், பூச்சிகளும், தட்டான்களும் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குமுறுகிறார்கள். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நெளியும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web