அதிர்ச்சி வீடியோ... ரயிலில் குடுமிப்பிடி சண்டை போடும் பெண்கள்!

 
அதிர்ச்சி வீடியோ... ரயிலில் குடுமிப்பிடி சண்டை போடும் பெண்கள்! 

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. ரயில் பயணங்களில் சர்ச்சைகள், விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அந்த வகையில் மும்பை லோக்கல் ரயிலில் நடந்த ஒரு பிரச்சனை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பெண்களுக்கு இடையே பிரச்சனைகள் நடக்கும் ரயிலா இது? இல்லையெனில் வீரர்கள் பங்கேற்கும் யுத்தமேடையா? எனக் கேள்வி கேட்கும் அளவிற்கு பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.

அதாவது சமீபத்தில் மும்பை லோக்கல் ரயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அவர்கள் முடியை பிடித்து இழுத்து சண்டையிட்டனர். இதனை சுற்றி இருந்த அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் மும்பை லோக்கல்” என்னும் தலைப்பில் மிகவும் வேகமாக வைரலானது. 

 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒருவர் டெல்லி மும்பை ரயில்களில் இது சாதாரணமாகிவிட்டது எனக் கூறியுள்ளார். இன்னொருவர் பெண்கள் சண்டையில் முடியை இழுத்தால் தான் அது முழுமையாக இருக்கும் என நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார். மேலும் இது குறித்து “உண்மையில் இத்தகைய சண்டைகள் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதாக இருக்கும் நிலையில் இது பற்றி கவலை கொள்ள வேண்டிய நேரம் இது தான்” என கருத்து தெரிவித்துள்ளார்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web