அதிர்ச்சி வீடியோ... ஊட்டி சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்... நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்!

 
தீப்பிடித்த கார்

கல்லூரி மாணவர்கள், ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றிருந்த நிலையில், இவர்களது கார் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென தீ பற்றி முழுவதும் எரிந்து முழுவதுமாக தீக்கிரையாகி சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தந்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் 5 பேர் குன்னூர் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மலைப்பாதையில் இவர்கள் பயணித்த கார் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென்று காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக 5 மாணவர்களும் காரை நிறுத்தி விட்டு, காரில் இருந்து வெளியேறி உள்ளனர். 

ஊட்டி

காரின் எஞ்சின் பகுதியைத் திறந்து பார்த்த போது திடீரென தீ பற்றியது. இது குறித்து உடனடியாக குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காரின் பற்றிய நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இருந்தபோதிலும் கார் முழுவதும் எரிந்தது. இது தொடர்பாக இன்னொரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கார் எரிந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web