அதிர்ச்சி வீடியோ.. நடிகர் ஜூனியர் என்டிஆரின் 60 அடி உயர கட்-அவுட் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம்!
ஆந்திரா முழுவதுமே நேற்று ஜூனியர் என்டிஆரின் தேவாரா திரைப்பட ரிலீஸை முன்னிட்டு திருவிழா கோலம் பூண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் படம் ரிலீஸானதால் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர், மாரடைப்பால் காலமானார்.
அதே சமயம் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வெளியே நடிகர் ஜூனியர் என்டிஆரின் 60 அடி உயர கட்-அவுட் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவாரா படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. ஜூனியர் என்டிஆர் ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
Crackers valla unfortunately jarigina accident anthe
— S (@UrsShareef) September 27, 2024
Erugu disti ,porugu disti ,Haters disti Thu Thu Thu
Disti Poyindi anthe 🔥#Devara #DevaraBlockbuster#JrNTR #KoratalaSivapic.twitter.com/ROBjvk5TNP
இவர்களுடன் சைஃப் அலிகான், டல்லூரி ராமேஸ்வரி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ, நரேன், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கொரட்டாலா சிவா எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. ஏறக்குறைய 6 வருடங்களுக்குப் பிறகு ஜூனியர் என்டிஆரின் படம் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக தேவாரா ரிலீஸ் விழாவையொட்டி ஹைதராபாத் ஆர்டிசி எக்ஸ் ரோட்டில் உள்ள சுதர்சன் தியேட்டர் முன்பு ஜூனியர் என்டிஆரின் 60 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்த போது கட்-அவுட்டில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!