அதிர்ச்சி வீடியோ... இசை நிகழ்ச்சியில் பயங்கர தாக்குதல்... 60 பேர் பலியான சோகம்... 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
ரஷ்யா இசை நிகழ்ச்சி

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைப்பெற்று கொண்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், திடீரென அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டதில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பிரபலமான குரோகஸ் சிட்டி ஹாலில் நேற்றிரவு இசைநிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. பிக்னிக்  ராக் இசைக் குழுவினர் நடத்திக் கொண்டிருந்த இந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டிருந்தனர். 


அப்போது  திடீரென துப்பாக்கிகளுடன் அரங்கிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், ரசிகர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் சிதறியோடியது. இதில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திடீரென துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டதால் மக்கள் உயிர் தப்ப சிதறியோடினார்கள். தப்பியோடி  மக்கள் மீது வெறித்தனமாக கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். திரும்பும் திசையெல்லாம் தீப்பிழம்புகளும், மரண ஓலமுமாக அந்த இடமே ரத்தக்களறியாக காட்சியளித்தது. 

இசை நிகழ்ச்சி

அதன் பின்னர், மர்ம கும்பல், அரங்கத்திற்கு தீயிட்டு கொளுத்தி, வெடிமருந்துகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து 60 பேர் உடல்களை மீட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web