அதிர்ச்சி வீடியோ... குழந்தையுடன் வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த பஜீந்தர்சிங்... !

 
பஜீந்தர்சிங்

 
புகழ்பெற்ற பாஸ்டர் பஜிந்தர் சிங் இந்திய தடகள வீரர் . இவரது  அலுவலகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பிப்ரவரி 2025ல்  பஜிந்தர் சிங்  அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியரை நோக்கி கைப்பேசியை வீசுகிறார். அதன் பிறகு பெண்கள் பயன்படுத்தும் பையை கொண்டு அந்த ஊழியரை சரமாரியாக தாக்கி அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.  இதனையடுத்து குழந்தையுடன் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண்ணையும் பஜிந்தர் சிங் அறைந்து தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

அந்த பெண்ணுக்கும், பாஸ்டருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டதுஇந்நிலையில், பஜிந்தர் சிங்கின் மீது ஏற்கனவே பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் உட்பட  புகார்களின் அடிப்படையில், கபூர்தலா போலீசார் ஐபிசி பிரிவுகள் 354-A, 354-D மற்றும் 506 இவைகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

இதுவரை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் சிங், புகாராளரை “தனது மகள் ” என குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் அனைத்தையும் “பொய் மற்றும் அடிப்படையற்றவை” என கூறியுள்ளார். தற்போது சிசிடிவி வீடியோ வெளியாகிய பிறகு, அவரை உடனடியாக கைது செய்யும் படி கோரிக்கைகள் எழுந்துள்ளன.

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web