கேரவனில் 'ஸ்பை கேமரா'... நடிகைகளின் நிர்வாண வீடியோக்களைப் பார்த்து ரசிக்கும் ஹீரோக்கள்... நடிகை ராதிகா சரத்குமார் அதிர்ச்சி பேட்டி!
படப்பிடிப்பு தளங்களில் உடை மாற்றவும், ஓய்வு எடுக்கவும் நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படும் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளைப் பதிவு செய்வதாக நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
நீதிபதி ஹேமா குழுவினர் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து மலையாள திரையுலகம் சிதறு தேங்காய் போல சிதறியிருக்கிறது. மலையாள நடிகர் சங்க தலைவர் நடிகர் மோகன்லால் உட்பட 16 பொறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருக்கிறார்கள். தினம் தினம் மலையாள நடிகைகள், பாடகிகள், ஹேர் டிரெஸ்சர், துணை நடிகைகள், கதாசிரியர்கள், டான்ஸர்கள் என்று பலரிடம் இருந்தும் புகார்கள் மலையாள திரையுலக ஹீரோக்கள், இயக்குநர்கள் மீதும் குவிந்து வருகின்றன.
நடிகரும், சிபிஐ(எம்) கட்சியின் எம்எல்ஏவுமான முகேஷ், நடிகா்கள் ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு ஆகியோா் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு மலையாள செய்தி நிறுவனன் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் அதில், 'கேரளாவில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளைப் பதிவு செய்து, படப்பிடிப்பில் அந்த வீடியோ காட்சிகளை நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து செல்போனில் பார்த்து ரசிப்பதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். இதனால் நான் பயந்து போய் ஹோட்டலில் ரூம் புக் செய்து ஆடையை மாற்றி இருக்கிறேன்’ என்று பேசியிருப்பது மேலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!