திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

 
திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!


கொரோனா ஊரடங்கு எல்லா துறைகளையுமே புரட்டி போட்டிருந்தாலும், ஐ.டி. ஊழியர்கள் கொஞ்சம் தெம்பாகவே இருந்தனர். அவர்களது சம்பளத்தில் துண்டு விழுந்தது நிஜம் என்றாலும், கொரோனா தொற்று பரவ துவங்கிய ஆரம்ப நாட்களிலேயே பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு 2 வருட காலத்திற்கு வொர்க் ஃப்ரம் ஹோம் என்று அனுமதி கொடுத்து தான் நிறுவனங்களை நடத்த ஆரம்பித்தன.

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

வெளியூர், வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், மாத சம்பளத்தில் செலவு என்று பெரிதாக எதுவும் இல்லாமல் வழக்கமான பட்ஜெட்டில் சம்பளத்தின் பாதி மிச்சமானது அவர்களது இத்தனை ஆண்டு கால ஊதாரித்தனமான செலவுகளை கண் முன் கொண்டு வந்தது. இப்போது இதற்கு தான் வேட்டு வைத்திருக்கின்றன ஐ.டி. நிறுவனங்கள்.

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக வீடுகளுக்குள் முடங்கி இருந்தது. ஒர்க் ப்ரம் ஹோம், ஆன்லைன் மூலமே பாடங்கள் என அனைவரது நடைமுறையும் மாறிப்போனது.

அந்த வகையில் முண்ணனி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் உள்பட பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறைக்கு அனுமதி அளித்திருந்தது
ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதன் அடிப்படையில் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!


அதன்படி நவம்பர் 15 முதல் இந்தியா உட்பட உலகின் அனைத்து டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அலுவலர்கள் அனைவருமே நிச்சயம் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசிஎஸ் மட்டுமின்றி ஹெச்.சி.எல், உள்பட பல ஐடி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web