கல்லூரி வளாகத்தில் பாதி எரிந்த நிலையில் மருத்துவ மாணவர் மர்ம மரணம்... பகீர்...!!
Updated: Nov 2, 2023, 16:22 IST
ஜார்க்கண்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவரின் உடல், எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கல்லூரியில் தமிழ்நாட்டை சேர்ந்த மதன்குமார் என்ற மாணவர் 2-ம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த நிலையில், அவர் திடீரென காணாமல் போனதாக கூறப்பட்டது. இதையடுத்து, ஜார்கண்டில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ் என்ற மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே தமிழக மாணவர் மதன்குமாரின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ மாணவர் மதன்குமார் உடல் அவர் படித்து வந்த மருத்துவ கல்லூரி அருகிலேயே கண்டெடுக்கப்பட்டு உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
மாணவரின் மரணம் குறித்து ராஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் மதன்குமாரை யாரேனும் கொலை செய்து எரித்து விட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
From
around the
web