பேரதிர்ச்சி.. விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..!!
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மணப்பாறை கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதிக்கு மணிமேகலை (வயது 15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி இறந்துவிட்டார்.
இதனையடுத்து ராஜரெத்தினம் கலையரசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மணிமேகலை திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறைவிடப்பட்டதால் மணிமேகலை வீட்டுக்கு வந்து
இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தங்கி இருந்தார். நேற்று காலையில் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றுபார்த்தபோது, மணிமேகலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமேகலை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!