அதிர்ச்சி... ஓடும் பேருந்தில் 4 பவுன் நகையைத் திருடிய இளம்பெண்!

 
துணிகரம்! ஓடும் பேருந்தில் ரூ 3,00,000/- நகை, பணம் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஓடும் பேருந்தில் 4 பவுன் நகையைத் திருடி சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து இளம்பெண்ணிடம் இருந்து நகையை மீட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த கரிசல்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த விவசாயி மாடசாமி என்பவரின் மனைவி செல்லம்மாள் (70). சம்பவத்தன்று இவர், கோவில்பட்டி சென்று விட்டு கரிசல்குளத்திற்கு அரசு டவுன் பஸ்ஸில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

நகை கொள்ளை

அப்போது, அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர், மூதாட்டியிடம், உங்கள் கழுத்தில் அணிந்துள்ள தங்கச்சங்கிலி அறுந்து விழுவது போல் இருக்கிறது. அதை கழட்டி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டியும் தனது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை, கழட்டி மணிபர்ஸில் வைத்து தனது கூடைப்பையில் வைத்துள்ளார்.

அடுத்து வந்த வில்லிசேரி பேருந்து நிறுத்தத்தில் அந்த இளம்பெண் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்று விட்டார். அங்கிருந்து பேருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில், செல்லம்மாள் கூடைப்பையில் வைத்திருந்த மணிபர்சு காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த மணி பர்ஸில் 4 பவுன் தங்க சங்கிலியுடன், ரூ.450 பணத்தையும் வைத்திருந்து உள்ளார்.

தூத்துக்குடி

உடனடியாக பேருந்தை நிறுத்தி, சக பயணிகளிடம் விசாரித்தனர். ஆனால் செல்லம்மாளின் மணிபர்சு கிடைக்கவில்லை. அவரது அருகில் இருந்த இளம்பெண் நகை, பணத்துடன் திருடி சென்றிருக்கலாம் என சக பயணிகள் கூறினர். இது குறித்து செல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கோவில்பட்டி மந்திதோப்பை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி பார்வதி (30) மூதாட்டியிடம் நகையையும், பணத்தை திருடியது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் பார்வதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்லம்மாளின் 4 பவுன் சங்கிலி மீட்கப்பட்டது. பின்னர் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவர், மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் பார்வதி அடைக்கப்பட்டார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web