அதிர்ச்சி... செல்போன் பார்த்தபடி தண்டவாளத்தைக் கடந்த 2 மாணவர்கள் ரயில் மோதி மரணம்!

 
தினேஷ்

அடுத்த தலைமுறையினரிடையே பெரும்பாலானவர்களுக்கு ஆறாவது விரலாக செல்போன் முளைத்துள்ளது. தூங்கி எழுந்ததும் செல்போனில் கண்விழிப்பவர்கள் இரவு தூங்க செல்லும் வரையிலும் செல்போனே கதியென்று இருக்கிறார்கள். இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையத்தில் செல்போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 பள்ளி மாணவர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமார் மற்றும் ரவிக்குமார். இவர்களது மகன்கள் தினேஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரும் ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

தண்டவாளம்

நண்பர்களாகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்து கிளம்பி ஒன்றாக விளையாடச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் இருவரும் செல்போனில் கேம்ஸ் விளையாடி கொண்டே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 

அப்போது சேலத்தில் இருந்து விருதாச்சலம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி மாணவர்கள் இருவர் மீதும் மோதியுள்ளது. இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் மகன் அரவிந்தை மீட்டு அப்பகுதியினர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அரவிந்த்தும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஆம்புலன்ஸ்

இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web