அதிர்ச்சி... ஒரே நாளில் விடுதியில் மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!
ஒரே நாளில் தனியார் பல்கலைக்கழக விடுதியில், மாணவரும், மாணவியுன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவரும், மாணவியும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் நரேசபுரத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (20). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பல்கலைக்கழக விடுதி ஒன்றில் தங்கியிருந்து பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே மஞ்சுநாத், தொடர்ந்து வகுப்புக்குச் செல்லாமல் அறையிலேயே தங்கியிருந்த நிலையில், நேற்று காலை தனது அறையில் தங்காமல், நண்பர்கள் அறையில் தங்கியுள்ளார்.
அறையில் இருந்த சக மாணவர்கள் வகுப்புக்கு சென்றுவிட்டு, காலை 11:30 மணிக்கு மீண்டும் அறைக்கு திரும்பி வந்து பார்த்த போது மஞ்சுநாத், அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதேபோல ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புள்ளகுர்லாபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அகிலா (19). அதே பல்கலையில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மாணவி அகிலாவும் நேற்று வகுப்புக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்தார். வகுப்பு முடிந்து சக மாணவிகள் அறைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அறையின் மின் விசிறியில் தூக்கிட்டு அகிலா தொங்கியதைப் பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோயில் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து ஒரே பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த, மாணவரும், மாணவியும் தற்கொலை செய்து கொண்டது குறித்து விருதுநகர் ஏடிஎஸ்பி சூரியபிரகாஷ் நேரில் விசாரணை நடத்தினார். இருவரது தற்கொலைக்குமான காரணம் குறித்து கிருஷ்ணன்கோயில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!