அதிர்ச்சி... விமானத்தில் எச்சில் துப்புதல், சிறுநீர், உள்ளாடைகள், காண்டம்.... கதறும் விமான ஊழியர்...!
சமீபகாலமாக விமானப் பயணங்களில் தொடர் சர்ச்சைகளும், புகார்களும் எழுந்து வருகின்றன. இதனால் விமானப் பயணிகள் பெரும் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியிருப்பதாக பலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனம் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அவருடைய பணி அனுபவங்களை வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவற்றில் பலதகவல்கள் அதிர்ச்சிகரமானவை. அதில், பல சுவாரசிய மற்றும் அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்து உள்ளார்.
விமானப் பயணத்தில் எது குறித்து வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம் என கூறியிருந்தார். அந்த பதிலில் விமானத்தில் அதிக வெறுப்புணர்வை தூண்டுகிற விஷயம் குறித்து கவலையுடன் பதிவிட்டுள்ளார். அதன்படி விமானத்தில் பயன்படுத்தப்பட்ட காண்டம்கள், அழுக்கடைந்த ஆண் மற்றும் பெண்ணின் உள்ளாடைகள் , பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். குறைந்தது வாரத்திற்கு ஒருவராவது கழிவறையில் சிகரெட் புகைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்தியிருக்கிறேன். ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை குடிபோதையில் தகராறு செய்ய கூடிய பயணிகளையும் பார்த்திருக்கிறேன். அடிக்கடி அல்ல.
இவையெல்லாம் எந்த நகரங்களுக்கு பயணம் செய்கிறோம் என்பதை பொறுத்தது. உதாரணமாக லாஸ் வேகாசுக்கு செல்லும் போது விமானத்தில் குடிபோதையில் ஏற முயற்சிக்கும் பயணிகள் நிறைய பேர் உள்ளனர் என எழுதி இருக்கிறார்.சில பயணிகள் சண்டையிடுவதும், இருக்கையிலேயே சிறுநீர் கழிப்பதும் நடந்துள்ளது. ஒரு சில சமயங்களில் பயணி ஒருவர் சக பயணி அல்லது விமான ஊழியர் மீது மீது எச்சில் துப்ப முயற்சித்து இருக்கிறார் எனவும் கூறியுள்ளார்
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க