அதிர்ச்சி.. பிரபல பூங்காவில் அடுத்தடுத்து செல்லப்பிராணிகள் பலி...!!

 
செல்லப்பிராணிகள் பலி
பிரபல பூங்காவிற்கு அழைத்து வரும் செல்லப்பிராணிகள் பலியாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் நாட்டின், கோவன் பகுதியில் பிரபலமான பேரி திடல் என்ற பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் நடைபயிற்சிக்கு வரும் போது தங்கள் செல்லப்பிராணிகளையும் அழைத்து வருவது வழக்கம். அவ்வாறு அழைத்து வரப்பட்ட இரண்டு நாய்கள் வினோதமான முறையில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்த பேரி திடலில் பேரி தொடக்கப்பள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த இடத்தில் பள்ளி இல்லை. வெறும் திடல் மட்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

Hysterical barking, seizures': Kovan dog walkers avoid popular field after  2 dogs die of suspected poisoning - TODAY

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களின் உரிமையாளர்கள் அவற்றை பேரி திடலுக்கு விளையாட அழைத்து வருவது வழக்கம். அவ்வாறு அண்மையில் பேரி திடலுக்கு விளையாட அழைத்து வரப்பட்ட பாலோ (Palo), மற்றும் சன்கிஸ் (Sunkiss) எனும் இரு நாய்கள் வினோதமான முறையில் மர்மமாக பலியாகின. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும், நாய்கள் பலியானதற்கான தெளிவான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

Is someone poisoning dogs in field at Kovan? At least 3 have died

இதனிடையே, பேரி திடலிலும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் நாய்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விஷப் பொருள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.   இது தொடர்பாக, தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், செல்லப் பிராணிகளையும், நாய்களையும் பேரி திடலுக்குக் அழைத்து வருவதை தவிர்க்கும்படி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கோவன் பகுதியில் உள்ள நாய்களுக்கு விஷப் பொருளால் பாதிக்கப்பட்ட சில அறிகுறிகளைக் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web