அதிர்ச்சி... 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!

தென்காசியில் தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி மகேஷ் (30). குடும்ப பிரச்சினை காரணமாக மகேஷ் தனது குழந்தைகள் சுதர்சன் (6), முகிலன் (2) ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்துள்ளார்.
இதையறிந்த உறவினர்கள், 3 பேரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!