அதிர்ச்சி... செல்போன் ஹாட் ஸ்பாட் பகிர மறுத்த நபர் படுகொலை!

 
குல்கர்னி

முன் பின் தெரியாத இளைஞர்கள் நான்கு பேர், செல்போன் ஹாட் ஸ்பாட் பகிரக் கூறி கேட்ட நிலையில், ஹாட் ஸ்பாட் பகிர மறுத்தவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளது புனேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் குல்கர்னி. நிதி நிறுவன ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  

ஹாட் ஸ்பாட்

அப்போது, அடையாளம் தெரியாத 4 இளைஞர்கள் அவரை வழிமறித்து மொபைல் ஹாட்ஸ்பாட்டை பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தினர்.  ஆனால் அவர் ஹாட்ஸ்பாட்டை பகிர மறுத்து விட்டார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

ராமச்சந்திரா

இதனால்  ஆவேசம் அடைந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திர குல்கர்னியை சராமாரியாக குத்தினர். அலறித்துடித்து ராமச்சந்திர குல்கர்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  கொலை செய்த இளைஞர்கள் அங்கிருந்த தப்பிச் ஓடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மயூர் மோசாலே என்ற இளைஞரையும் 3 சிறுவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web