நடுக்கடலில் அதிர்ச்சி.. மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

 
பால்ராஜ்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் வரும் 23ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும், மறுஅறிவிப்பு வரும் வரை கரையில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. .

மீனவர்கள்

இந்நிலையில் மீன்வளத்துறையின் எச்சரிக்கைக்கு முன்னதாகவே, நாகை அக்கரைப்பேட்டையில் இருந்து அழகிரிசாமி என்பவருக்கு சொந்தமான மோட்டார் படகில் 10 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று, கோடியக்கரை அருகே, 20 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​அக்கரைப்பேட்டை டாடா நகரைச் சேர்ந்த மீனவர் பால்ராஜ், படகிலேயே மயங்கி விழுந்தார்.

கொலை

இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் பால்ராஜை மீட்டு உடனடியாக கரைக்கு திரும்பி ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, கடற்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web