சென்னையில் பெரும் அதிர்ச்சி... 5 பேரை வீட்டு வேலைக்கு கொத்தடிமைகளாக வைத்திருந்த ரக்சிதா!
மூஞ்சும் முகரையும் பாரு என்று முகத்தில் குத்த தோன்றுகிறது. சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்களாகிறது என்று பெருமையுடன் நெஞ்சில் தேசிய கொடியைக் குத்திக் கொள்கிறோம். ஆனால், இந்த காலத்திலும் அதுவும் சென்னை வளசரவாக்கத்தில் 5 பேரை கொத்தடிமைகளாக வைத்து வீட்டு வேலை செய்ய ஈடுபடுத்தி வந்துள்ளார் ரக்சிதா என்கிற பெண். இது குறித்து தகவலறிந்த போலீசார் அதிரடியாக நுழைந்து வீட்டிற்குள் கொத்தடிமைகளாக வீட்டு வேலைக்கு வைத்திருந்த 5 பேரையும் மீட்டு, அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்த ரக்சிதாவையும் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகர் 2வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கொத்தடிமைகளாக வீட்டு வேலை செய்து வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலின் பேரில் நேற்றிரவு அந்த வீட்டிற்குள் திடீரென அதிரடியாக நுழைந்த சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் சோதனையில், அந்த வீட்டில் ஒரு சிறுவன், சிறுமி உட்பட 5 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பூந்தமல்லியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், 20 வயது இளம்பெண் ஆகியோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்திருப்பதாகவும், ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 20 வயது இளம்பெண், 34 வயதான பெண் ஆகியோருக்கு 4 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாகவும் இந்த வீட்டில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் அந்த வீட்டில் வசித்து வந்த ரக்சிதா என்ற பெண் இவர்கள் 5 பேரையும் அடித்து துன்புறுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வளசரவாக்கம் காவல் துறையினரிடம் அதிகாரிகள் புகார் அளித்தனர். இது குறித்த புகாரின் பேரில் 5 பேரையும் மீட்ட போலீசார், அவர்களை மயிலாப்பூர், கெல்லீஸ், தாம்பரம் அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த வீட்டில் வசித்து வந்த ரக்சிதா என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மீது குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!