ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி.. 13பேர் படுகாயம்!

 
 காபூல் விபத்து

உலகின் இன்னொரு பக்கம், வரலாற்றின் இருண்ட பக்கங்களாகவே நீடித்து வருகிறது. துப்பாக்கி குண்டுகளும், போர் முரசும், உணவில்லாமல் குடிக்க தண்ணீரும் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் இந்த உலகின் ஏதோவொரு மூலையில் போர் மற்றும் பயங்கரவாதிகள் குறித்த அச்சத்தினால் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக காபூல் போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திங்கள்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர் உடலில் வெடிகுண்டுகளை ஏந்தி தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலை காபூல் போலீசார் உறுதி செய்தனர்.

காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் ஜர்டன் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, ஒரு பெண் உட்பட 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தெற்கு காபூலில் உள்ள Qala e Bakhtiar பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தான் தலிபான்களால் கைப்பற்றப்பட்டது.

அன்றிலிருந்து, வெளிநாட்டுப் படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையிலான மோதல்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து, வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. இருப்பினும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இஸ்லாமிய அரசு குழுவான IS Khorasan, ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு, பொதுமக்கள், வெளிநாட்டினர் மற்றும் தலிபான் அதிகாரிகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web