அதிர்ச்சி... எஸ்பிஐ வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு!

 
எஸ்பிஐ
 


நாமதி நகரில் நேரு சாலையில் எஸ்பி.ஐ., வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று வங்கிக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை இருந்த நிலையில் வங்கி பூட்டப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் வங்கிப் பணிக்கு வந்த போது, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வங்கியின் உள்ளே பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. வங்கியின் லாக்கர் முழுவதுமாக உடைபட்டிருந்த நிலையில், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் ரூபாய் ரொக்கம், 12.95 கோடி ரூபாய் மதிப்புள்ள 17.705 கிலோ தங்க நகைகள் ஆகியவைத் திருடப்பட்டிருந்தன.

எஸ்பிஐ

இது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் ஊழியர்கள் உடனடியாக தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாமதி போலீசார் ஆய்வு செய்தனர்.மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நள்ளிரவிலோ அல்லது சனிக்கிழமை அதிகாலையிலோ மர்ம கும்பல் வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து, உள்ளே புகுந்து திருடிச் சென்றுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இந்த எஸ்பிஐ வங்கியில் மூன்று லாக்கர்கள் உள்ளன. இரண்டு லாக்கர்களை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை. அவற்றில் ஒரு லாக்கரை மட்டும் காஸ் கட்டரால் உடைத்து அதனுள் இருந்த பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கண்காணிப்பு கேமராவின் பதிவு கருவியை கொண்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். தடயங்கள் கிடைக்காமல் இருக்க அந்த பகுதி முழுவதும் மிளகாய் பொடியை துாவி விட்டுச் சென்றுள்ளனர். குடியிருப்பு பகுதியில் இருந்து வெகு தொலைவில் வங்கி இருந்ததால் திருட்டு நடந்தது உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. 

உத்தரபிரதேச போலீஸ்

இந்த வங்கிக்கு இதுவரை இரவு காவலாளியை நியமிக்காமல் இருந்து வந்தது கொள்ளையர்களுக்கு வசதியாகி விட்டது.போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.இந்த பகுதியில் ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கொரு முறை வங்கியில் கொள்ளையடிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த 2014ல் இதே பகுதியில் கர்நாடக வங்கியில் கொள்ளை நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த 2019ல் அதே கர்நாடக வங்கி கிளையில் மீண்டும் ரூ.2 கோடி மதிப்புள்ள பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். தற்போது 2024ல் எஸ்பிஐ வங்கியில் கொள்ளை நடந்துள்ளது என்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web