அதிர்ச்சி... மூன்று நாளில் திருமணம்... புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை கோடம்பாக்கம் பிரதீஸ்வரர் காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் சந்தியா (27). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தனது உறவினரான பரத் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் தொடர்ந்து கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக கணவனை பிரிந்து சந்தியா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மகளுக்கு இளம் வயது என்பதால் சந்தியாவின் தாயார், சந்தியாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க சிவா என்பவருடன் திருமண நிச்சயம் செய்திருந்தனர். இது குறித்து சந்தியாவின் சம்மதத்தையும் பெற்றிருந்தனர். அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நிலையில் வரும் நவம்பர் 17ம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது.
இரு வீட்டாரும் திருண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து வந்தனர். இந்நிலையில் சந்தியாவின் பெற்றோரும், உ றவினர்களும் திருமணத்திற்கு தேவையான துணிகள் வாங்க கடைக்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது சந்தியாவின் அறைக்கு சென்றுப் பார்த்த போது அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இது குறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் விரைந்து சென்று சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இளம்பெண் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிந்து, சந்தியா செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!