கார் பந்தய பணியில் உதவி கமிஷனர் மயங்கி விழுந்து பரிதாப பலி!

 
சிவக்குமார்

சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. இந்த கார் பந்தயத்திற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி கொளத்தூர் சரக உதவி ஆணையர் சிவக்குமார் கார் பந்தயம் நடக்கும் இடத்தில் உள்ள விஐபி கேட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஃபார்முலா 4 கார் பந்தயம்

இந்நிலையில் மதியம் 1.10 மணியளவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பாதுகாப்புக்காக இருந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அங்கு இருந்த சக அதிகாரிகள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுயநினைவின்றி இருந்த அவருக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

கொலை

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பாதுகாப்பு பணியின் போது உதவி கமிஷனர் சிவகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web