ஷாக்.. கொதிக்க கொதிக்க சூடான பாலை சிறுவன் வாயில் ஊற்றிய கொடூரம்.. அங்கன்வாடி ஊழியர் அலட்சியம்!

 
பால்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் அருகே உள்ள கோனோடு அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ஷீபா (வயது 36). கடந்த 7ம் தேதி அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு பால் கொடுத்தார். சூடான பாலை ஆற வைக்காமல், கொதிக்கும் பாலை 3 வயது சிறுவனின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் சிறுவன் அலறினான். இதில் குழந்தைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து சிறுவனின் பெற்றோர் பினராய்  போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அங்கன்வாடி ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு சிறுவனை காயப்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து, குழந்தைகள் உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web