அதிர்ச்சி.. இடிந்து விழுந்த ஆயுஷ் மருத்துவமனையின் மேற்கூரை.. தலைதெறிக்க ஓடிய நோயாளிகள்!

 
 ஆயுஷ் மருத்துவமனை

காரைக்கால் ஆயுஷ் மருத்துவமனை வளாகத்தின் மேற்கூரையின் சிமென்ட் கான்கிரீட் அறுந்து விழுந்ததால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அச்சத்தில் வெளியேறினர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் ஒரு அங்கமாக, இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி (ஆயுஷ்) மருத்துவமனை, மருத்துவமனை வளாகத்தில், 2011ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது.பின்னர், 2018 முதல், காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள, பயன்பாடின்றி உள்ள நகராட்சி விடுதி கட்டடத்தில் இயங்கி வருகிறது. 

ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவுகள் மற்றும் மருந்தகங்கள் தனித்தனி அறைகளில் செயல்படுகின்றன. இங்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதியில் மேற்கூரையில் இருந்து சிமென்ட்  கான்கிரீட் விழுந்தன. பலத்த சத்தத்துடன் சிமென்ட் கீழே விழுந்ததால் நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே இந்த மருத்துவமனைக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web