அதிர்ச்சி.. 10 டன் வெள்ளி பறிமுதல்.. பறக்கும் படையினர் அதிரடி!
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 288 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில், தேர்தல் நாளான நேற்று, அம்மாநிலத்தின் துலே மாவட்டத்தில் உள்ள தல்னார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது, நாக்பூர் நோக்கிச் சென்ற டிரக்கில் இருந்து சுமார் 10 டன் (10,080 கிலோ) வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக நாசிக் சிறப்புக் காவல் கண்காணிப்பாளர் தத்தாத்ரே கராலே தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், வெள்ளி வங்கிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது, சரிபார்த்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அக்டோபர் 15 முதல், மகாராஷ்டிராவில் அமலாக்க நடவடிக்கைகளில் மாநில மற்றும் மத்திய அமைப்புகள் ரூ.706.98 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளன. இதில் சட்டவிரோத பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் உள்ளடங்குவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!