ஷாக்.. முட்டைகளில் பாக்டீரியா தொற்று.. மக்களை எச்சரித்த கனடா!

 
கனடா  முட்டை

கனடாவில் வாங்கப்பட்ட சில வகையான முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று பறவைக் காய்ச்சலின் விளைவுகளுடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் இந்த வகை முட்டைகளை உட்கொள்ளும்போது ஆபத்தில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கனடா

காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, கனேடிய உணவு ஆய்வு நிறுவனம் இந்த வகை முட்டைகளை வாங்குவதற்கு எதிராக எச்சரித்துள்ளது. கொம்ப்லிமென்ட்ஸ், போர்மோஸ்ட், கோல்டன் வேலி, ஐஜிஏ மற்றும் வெஸ்டர் ஃபேமிலி உள்ளிட்ட 6 வகையான முட்டைகளில் இந்த பாக்டீரியா தொற்று அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

முட்டை விலை திடீர் உயர்வு

பாதிக்கப்பட்ட வகை முட்டைகள் பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் ஒன்டாரியோ போன்ற மாகாணங்களில் விற்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முட்டைகளை வாங்கியவர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வகை முட்டைகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web