அதிர்ச்சி! கோவையில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து..!
இன்று(மார்ச் 26) காலை கோவை சூலூர் அடுத்த நீலாம்பூரில் தனியார் பள்ளி வாகனம் பள்ளி செல்வதற்காக பட்டணம் பகுதியில் உள்ள 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு, நாகம்மநாயக்கன்பாளையம் வழியாக ஜே.ஜே நகரில் உள்ள மற்ற மாணவ மாணவிகளை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்தது.
அப்போது ஜே.ஜே நகர் செல்லும் 30 அடி அகல மண் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் சாலை வலது புறமாக வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.
எதிர்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டில் மண் சரிந்ததால் பள்ளி வாகனம் 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் மீட்டனர். இந்த விபத்தில் மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அங்கிருந்த கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!