பிக்பாஸ் 8ல் களமிறங்கும் சிவாங்கி?.. இன்ஸ்டா பதிவு வைரல்!
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் டிவி நிர்வாகம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போட்டியாளர்களாக இருக்கும் பிரபலங்கள் தேர்வும் நடந்து வருகிறது. அதற்கான நேர்காணல் நடந்து வருவதாகவும், அதில் பல பிரபலங்கள் கலந்துகொள்வதாகவும் ஒரு செய்தி வருகிறது.
இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்க போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார். அடுத்து எந்த பிரபலம் தொகுப்பாளராக பங்கேற்க போகிறார் என பலரும் எதிர்பார்த்த்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிவாங்கி போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அது உண்மையில்லை என நீ சிவாங்கி இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். பிக்பாஸ் வர வாய்ப்பே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!