’என்னை பார்த்து சிரித்தாள்’.. சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இளைஞர்.. அதிர்ச்சி பின்னணி!

 
ராகுல்

இந்தியாவின் குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 14ஆம் தேதி குஜராத்தில் உத்வாடா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் அருகே 19 வயது இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

சிறுமி

இந்த கொலை சம்பவம் குறித்து வல்சாத் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்வாடா ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். டி-சர்ட் பேண்ட் அணிந்த ஒருவர் கொலைக்குப் பிறகு ரயில் நிலையத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சந்தேக நபரை கண்டுபிடிக்க தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேடுதலின் முடிவில், நவம்பர் 24-ம் தேதி குஜராத் மாநிலம் வல்சாத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் வசிக்கும் ராகுல் கரம்வீர் ஜாட் என அடையாளம் காணப்பட்டார். கொலை நடந்த அன்று அப்பகுதியில் தான் வேலை செய்யும் உணவகத்திற்கு சம்பளம் வாங்க வந்த இவர், டியூஷன் முடித்து வீடு திரும்பிய 19 வயது இளம்பெண்ணை வன்புணர்வு செய்து கொன்றுவிட்டு ரயில் நிலையத்தில் அமர்ந்துள்ளார். அந்த பெண் தன் போனை பார்த்து சிரித்து கொண்டிருந்தார். அவள் தன்னைப் பார்த்து புன்னகைப்பதாக நினைத்து அவளை கொன்றேன் என்று ராகுல் கூறினார்.

இந்த ஒரு கொலை மட்டுமின்றி, குறைந்தது 5 பேரையாவது கொன்றதாக ராகுல் கரம்வீர் ஜாட் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். நவம்பர் 24-ம் தேதி அவர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள், தெலுங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே ஒரு பெண்ணைக் கொள்ளையடித்து கொலை செய்தார்.இவர் கடந்த அக்டோபர் மாத இறுதியில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். அப்போது மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையம் அருகே கதிஹார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பீடி பிடிக்காத முதியவரை கொன்றார். கர்நாடகாவின் முல்கி பகுதியில் ரயில் பயணி ஒருவரை கொன்றார்.

அவர் அடிக்கடி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதால், அவரைப் பிடிப்பதில் மாநில போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. பெரும்பாலும், இரவில் ரயில்வே பிளாட்பாரங்களில் தூங்குவார்.சுமார் 2000 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் தற்போது அவரை பிடித்துள்ளனர். ரயில்களில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட்டு வழக்கில் கைதாகி ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்து இந்த ஆண்டு சமீபத்தில்தான் விடுதலையானார்.

போலீஸ்

ராகுல் கரம்வீர் ஜாட்டின் தந்தை இறந்த பிறகு, குற்றத்தில் ஈடுபடுவதை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை என்றும், அவர் ஐந்தாம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். தற்போது அவர் மீது 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web