அச்சச்சோ... நடிகர் ஷாருக்கானுக்கு என்னாச்சு? சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்!
பிரபல நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஐபிஎல் தொடர் நடைபெற்ற போது, அகமதாபாத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணியின் போட்டியை நேரில் பார்த்து ரசித்தார் நடிகர் ஷாருக்கான்.
அப்போது அவர் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அடுத்த நாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முன் தினம், மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனது கண் தொடர்பான சிகிச்சைக்காக ஷாருக்கான் சென்ற நிலையில், திட்டமிட்டபடி சிகிச்சை நடைபெறவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், தனது கண் தொடர்பான சிகிச்சைகளுக்காக நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா செல்ல இருக்கிறார்