திருச்சியில் அதிர்ச்சி... வீடு புகுந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

 
விஜயன்

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா பெத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவரின் மகள் கவிதா (மனநலம் பாதிக்கப்பட்டவர்). கடந்த 2019-ம் ஆண்டு அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அதை ஊரே சேர்ந்த ​​திருமலையை என்பவரது மகன் விஜயன் என்பவர் கவிதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்தார்.

பாலியல் பலாத்காரம்

மேலும் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கவிதாவின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் புகார் உண்மை என தெரிய வந்ததும் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரபரப்பான விசாரணையின் முடிவில் விஜயன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. மேலும், குற்றவாளி விஜயனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web