பாலியல் சர்ச்சை.. வசமாக சிக்கிய நடிகர் ஜான் விஜய்.. ஆதாரங்களை வெளியிட்ட பாடகி சின்மயி!
தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், நடித்து வருபவர் ஜான் விஜய். நடிகர் ஜான் விஜய் மீது மீண்டும் பாலியல் புகார் எழுந்துள்ளது. திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து பேசி வரும் பிரபல பாடகி சின்மயி, தற்போது ஜான் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தனது X இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ஜான் விஜய்க்கு எதிரான ஸ்கீரின்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டிக்காக காத்திருந்த தன்னிடம் ஜான் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். அப்போதிருந்து சின்மயி, ஜான் மீத்தாவுக்கு எதிரான பல புகார்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து வருகிறார்.
After The Newsminute report about the Sexual Assault case of Malayalam cinema also mentioned John Vijay for his misdemeanour with the journalist
— Chinmayi Sripaada (@Chinmayi) July 26, 2024
There are other women speaking about his behaviour in general. pic.twitter.com/AfeLgdC0lY
"மலையாள சினிமா பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான நியூஸ்மினிட் அறிக்கைக்குப் பிறகு, ஜான் விஜய் ஒரு பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜான் விஜய் பற்றி பாதிக்கப்பட்ட பெண் கூறியதையும் சின்மயி குறிப்பிட்டுள்ளார். "நடிகர் ஜான் விஜய் எப்போதும் சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்களுக்கு செல்வார். அவர் தவறான அணுகுமுறையுடன் பெண்களை அணுகுகிறார். “வேண்டாம் என்று சொன்னாலும், கட்டாயப்படுத்துவார்.பெண்கள் தனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.தொடர்ந்து தொல்லை கொடுப்பார்.ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜான் விஜய் பதில் அளிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பது இது முதல் முறையல்ல. 2018 ஆம் ஆண்டில், மீ டூ இயக்கம் பிரபலமாக இருந்தபோது, பல பெண்கள் ஜான் விஜய் மீது பாலியல் புகார்களை அளித்தனர். ஜான் விஜய் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார், "நான் மிகவும் வெளிப்படையான நபர், நான் எந்த உள்நோக்கத்துடன் பேசுவதில்லை. ஆனால் சில நேரங்களில் எனது நகைச்சுவைகள் அனைவருக்கும் வேடிக்கையாக இருக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். சிலர் என்னை தவறாக புரிந்து கொள்வார்கள். அப்படி பேசும் போது யாராவது தவறாக நினைத்தால் உடனே பேச்சை நிறுத்தி விடுவேன். அல்லது நான் அந்த இடத்தை விட்டு வெளியேறுவேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா