பேருந்தில் பாலியல் சில்மிஷம்.. ஜன்னல் வழியாக தப்பி குதித்து எஸ்கேப் ஆன நபரை மடக்கி பிடித்த பெண்!

 
கேரளா பேருந்து

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை அடுத்த ஏனாத் பகுதியில் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் ஆத்தூரில் இருந்து கொட்டாரக்கரா பகுதிக்கு இளம்பெண் ஒருவர் தனது உறவினருடன் பயணம் செய்தார். அவர்கள் சென்ற பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஷனீர் (42) என்பவர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

ஆரம்பத்தில் அந்தப் பெண் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கி முகம் சுளித்தார். பின்னர், அந்த பெண்   ஒரு கட்டத்தில் ஷனீரின் கன்னத்தில் அறைந்தார். ஷனீர்  பற்றி பயணிகளிடம்  தவறான நடத்தை பற்றி தைரியமாக கூறினார். இதையடுத்து பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் ஷனீரை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கண்டக்டரிடம் கூறினர். அதற்குள் கண்டக்டர் பஸ்சின் இரு கதவுகளையும் மூடியதால் ஷனீர் பஸ்சில் இருந்து தப்ப முடியவில்லை.

கைது

இந்நிலையில், புதுசேரிபாகா பெட்ரோல் பங்க் அருகே சிக்னலுக்காக பேருந்து நின்றது. அப்போது பஸ்சின் ஜன்னல்  கண்ணாடியை கழற்றி அதன் வழியாக வெளியே குதித்து ஓடிவிட்டார் ஷனீர். இதை பார்த்த அந்த பெண் சற்றும் யோசிக்காமல் ஷனீரை துரத்த நினைத்து பஸ்சில் இருந்து இறங்கினார். ஓடி வந்த ஷனீரை விரட்டி விரட்டி ஒருவழியாக பிடித்தார். அதற்குள் பஸ்சில் இருந்த சிலர் ஷனீரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிறகு அதே பேருந்தில் ஏறி தன் இருப்பிடம் சென்றாள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷனீர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web