சங்கினா ‘நண்பன்’ தான்... ரஜினியுடன் சந்திப்புக்கு பிறகு சீமான்!

 
சீமான் ரஜினி


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில்   ரஜினிகாந்த் அரசியல் வருவதை வன்மையாக கண்டித்தார். அரசியல் மேடைகளில் ரஜினியைக் கண்டித்தும் பேசியிருப்பார்.  நேற்று சீமான் ரஜினியை நேரில் சந்தித்து பேசிய நிலையில் இந்த சந்திப்பு  அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறி இருந்தது.சீமான் அரசியல் நிமித்தமாக ரஜினியை சந்தித்து பேசியிருப்பார் என்றெல்லாம் பேசி வந்தனர்.

ரஜினி சீமான்

இந்நிலையில், இன்று காலை சீமான், தான் ரஜினியிடம் என்ன பேசினார் என்பதை வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது குறித்து சீமான்  “ரஜினியுடன் திரையுலகம், அரசியல் குறித்து பல விஷயங்களை பேசினேன். ரஜினிகாந்த்தை சந்தித்ததே ஒரு அரசியல்தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. அவர் வயதில் என்னைவிட மூத்தவர், இதனால் என்னை விட அதிக அரசியல் தலைவர்களுடன் பழகி இருப்பார்.
அரசியல் களம் என்பது ஒரு கொடூரமான ஒரு ஆட்டம், இது அவருக்கு சரியாக வராது என அவரிடமே நான் கூறினேன்.

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

அவருடன் நிறைய பேசினேன் அனைத்தையும் பகிர முடியாது”, என சீமான் கூறியுள்ளார்.   நடிகர் ரஜினியை சங்கி எனக் கூறி விமர்சனம் செய்வதை குறித்தும் சீமான் பேசி இருந்துள்ளார்.   சீமான், “சங்கினா என்னனு தெரியுமா? சக தோழன் ..நண்பன் என்று அர்த்தம். சன்பரிவாளரிலிந்து இவர்கள் சங்கி என்கிறார்கள். உண்மையான சங்கி யாரென்றால் எங்களை எல்லாம் சங்கி என்கிறார்கள் அவர்கள் தான் உண்மையான சங்கி. திமுகவை எதிர்த்தாலே சங்கி என்றால் பெருமையாக நாங்கள் சங்கி என்று ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். சங்கி என்றால் நண்பன் என்றும் பொருள் உண்டு. நீங்கள் அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்”, என சீமான் பேசியுள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web