திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு... பக்தர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக வங்கக் கடலோரம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் நிலை ஏற்பட்டுள்ளதால், தென் தமிழக கடற்கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதையடுத்து, திருச்செந்தூர் கோயில் பகுதியில் இன்று கடல் அரிப்பு காரணமாக சுமார் 25 அடி நீளம், 10 அடி ஆழம் கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதியில் அதிக அளவிலான கற்கள் உள்ளன. எனவே அந்தப் பகுதியில் பக்தர்கள் நீராட இயலாத சூழல் உள்ளது. கடல் அரிப்பு காரணமாக பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார், கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பக்தர்களிடம் அறிவுறுத்தினர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!