திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்... கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.... பக்தர்கள் அச்சம்!

 
திருச்செந்தூர்

 தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தினமும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.அந்த வகையில்  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்கின்றனர். நேற்று திருச்செந்தூரில் 60 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பீதியில் உறைந்தனர்.  

திருச்செந்தூர் முருகன்

இதனால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரியத் தொடங்கின. அவற்றின் மீது நின்று பக்தர்கள் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் இன்று ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியுள்ளது. ஒரு சில வகை ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு, தோல் நோய் ஏற்படும் அபாயமும் உண்டு.

திருச்செந்தூர் கோவில்

இதனால் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய கடல் மீன்வள அதிகாரிகள், இந்த வகை ஜெல்லி மீன்களால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு மீனவர்கள், பக்தர்கள் , பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web