நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை... விழுப்புரம் கலெக்டர் திடீர் அறிவிப்பு!
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்கள் இதுவரை இல்லாத வகையில் பெரும் பாதிப்புக்களை அடைந்துள்ளன .இதனையடுத்து தமிழக அரசு நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது.
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி என 2 நாட்கள் தொடர்ந்து இடைவிடாது பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். சில பகுதிகளில் பள்ளிகளையும், கல்லூரிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அத்துடன் நிவாரண முகாம்களாக பள்ளிகளும், கல்லூரிகளுமே செயல்பட்டு வருகின்றன. தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மழை பாதிப்பு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நாளை டிசம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார். மேலும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!