சிறுத்தை நடமாட்ட பீதி... பள்ளிக்கு விடுமுறை!
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் காட்டுக்குள் இருந்து வந்த சிறுத்தை சில நாட்களாக சுற்றித் திரிகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வாய்க்கால் வழியே வரும் போது அருகே இருந்த பன்றியை சிறுத்தை கொன்றது. மயிலாடுதுறையில் நேற்றிரவு செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தற்போது சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பட்டு வருகிறது.
சிறுத்தை குறித்து தகவல் அறிந்தால் 9626709017 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்கரை தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!