நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!

 
விடுமுறை

நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துடன் கன்னியாகுமரி 1956ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி இணைக்கப்பட்டது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள், தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளை வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

உள்ளூர் விடுமுறை

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘’1956ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

விடுமுறை

இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி 'கன்னியாகுமரி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக நவம்பர் 25ம் தேதி வேலை நாளாக அமையும்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web