நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை... !!

 
விடுமுறை

தமிழகத்தில்  பொதுவிடுமுறைகள் தவிர்த்து    முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள்  சமயங்களில்   மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போது கந்த சஷ்டி திருவிழா முருகன் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் முருகன்

அந்த வகையில்  முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான  சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை  முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

இன்று பிள்ளைப்பேறு அளிக்கும் சஷ்டி விரதம்!

குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களுடன் அரசு கருவூலங்கள் செயல்படும் . மேலும்  அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது.  
இந்த   விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் மாதம் 9ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்  அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக செயல்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web