வெடித்து சிதறிய எரிமலை! ஆறாக ஓடும் லாவா ! அழிந்த கிராமங்கள் !

வெடித்து சிதறிய எரிமலை! ஆறாக ஓடும் லாவா !  அழிந்த கிராமங்கள் !

ஸ்பெயினில் எரிமலைகள் அதிகம் . இவை அவ்வப்போது வெடித்து சிதறுவதும், அதிலிருந்து லாவா எரிமலை குழம்பு வழிந்தோடுவதும் வழக்கமான ஒன்று தான்.அந்த வகையில் பல்மா தீவில் கும்ரே வீஜா எரிமலை, செப். 19ம் தேதி வெடித்து சிதறத் தொடங்கியது.

வெடித்து சிதறிய எரிமலை! ஆறாக ஓடும் லாவா !  அழிந்த கிராமங்கள் !

அப்போதிருந்து தற்போது வரை தொடர்ந்து சீற்றத்துடன் லாவா குழம்பை கக்கி வருகிறது. எரிமலையிலிருந்து வெளிப்படும் லாவா குழம்பு, மலை முகட்டில் ஆறுபோல் வழிந்தோடுகிறது.இதனால் அப்பகுதியில் உள்ள 4 கிராமங்களில் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்களும், நிலங்களும் அழிந்துவருகின்றன.

லாவா குழம்பு சீற்றத்துடன் வெளியேறுவதை அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 6000க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.தற்போது எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்து வருகிறது.

வெடித்து சிதறிய எரிமலை! ஆறாக ஓடும் லாவா !  அழிந்த கிராமங்கள் !

இதனையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கேனரி தீவுகளின் மற்ற விமான நிலையங்களும் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

From around the web