ஆசை வார்த்தை கூறி உல்லாசம்.. பப்பாளி ஜூஸ் கொடுத்து கருவை கலைத்த காதலன்.. கதறும் இளம்பெண்!
தேனாம்பேட்டையை சேர்ந்த அருண்குமார் என்பவர் கல்லூரி நாட்களில் தன்னுடன் படித்த இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். திருமண வாக்குறுதியை நம்பிய இளம்பெண், அவருடன் நெருங்கி பழகியுள்ளார்.
இளம்பெண் கருவுற்று இதுகுறித்து அருண்குமாரிடம் கூறியபோது, கருக்கலைப்பு செய்ய வலியுறுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், இளம்பெண்ணுக்கு பப்பாளி பழச்சாறு கொடுத்து கருவை கலைத்து விட்டதாகவும் இளம்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த இளம் பெண்ணை மிரட்டி, அவர்கள் நெருக்கமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து அருண்குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது கட்டாய கருக்கலைப்பு, நம்பிக்கை துரோகம், கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!